Tuesday, 5 July 2011

இவளின் விழியில் கனவுகள்

வழியில் தொலைந்த கனவுகள்
விழிகளில் சேமிக்க தொடங்கினேன்
வரிவிலக்கில்லாமல்...

வந்தவர் எல்லாம் சொல்லி
அனுப்புகின்றோம் எனச் சொல்ல
செல்லரிக்கிறது மெல்ல கனவுகள்..

பட்டாடையோடு முதல் முறை
ஆபரணங்கள் குறைத்து அடுத்த முறை
பட்சனமும் குறைந்தது இன்னொரு முறை..

அப்பா விடுமுறை போட்டு
அண்ணன் அனுமதி வாங்கி
வேர்வையும் புழுதியுமாய் நான் ஓடிவந்து..

மாசசெலவில் இதுவும் அரங்கேற
தங்கை எட்டிப் பார்க்கிறாள் இவனாவது
அக்காவை பிடிக்கும் என சொல்வானா என?

புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறாள்
அவள் விழிகளிலும் கனாக்காலங்கள்..
 

0 Comments: